< Back
தேசிய செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு

Image Courtacy: ANI

தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு

தினத்தந்தி
|
1 Aug 2022 4:42 AM IST

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

அயோத்தி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு நடந்து வரும் பணிகளின் நிலவரம் குறித்து கட்டுமான பொறியாளர்களிடம் கேட்டறிந்த யோகி ஆதித்யநாத், கோவில் அமைவிடம் முழுவதையும் சுற்றிப்பார்த்தார்.

இதற்கிடையே அங்குள்ள பல்வேறு கோவில்களில் அவர் சாமி தரிசனமும் செய்தார். குறிப்பாக அங்குள்ள அனுமன் கார்கியில் சிறப்பு வழிபாடு செய்த யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமியிலும் வழிபட்டார்.

பின்னர் அங்கிருந்து திகம்பர் அகாராவுக்கு சென்ற யோகி ஆதித்யநாத் அங்கு மகந்த் ராம்சந்திர தாஸ் பரம்ஹன்சின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ராமஜென்மபூமி நியாசின் முதல் தலைவரான பரமஹன்ஸ் கடந்த 1949 முதல் ராமர் கோவில் இயக்கத்தை வழிநடத்தியவர் ஆவார்.

மேலும் செய்திகள்