< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி: டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு: பலர் படுகாயம்
|3 Nov 2022 4:10 PM IST
உத்தரப்பிரதேசத்தில் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள குபேர்பூர் பகுதியில் இன்று காலை 6:30 மணியளவில் சுமார் 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து பிரோசாபாத்தில் இருந்து ஆக்ரா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
பேருந்து பிரோசாபாத்தை ஆக்ராவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் அருகில் வசிப்பவர்கள் விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.