உ.பி. சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்: கடுமையான விதிமுறைகளுடன், மொபைல் போன்களுக்கும் தடை..!!
|எம்.எல்.ஏ.க்கள் கொடி, பேனர்களை சட்டசபைக்குள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு 66 ஆண்டு கால சட்டசபை விதிகளில் மாநில அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதில் முக்கியமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைப்போல அவர்கள் கொடி, பேனர்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளிடையே அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
யோகி ஆதித்யநாத் அரசின் உறுதிமொழிக்கு இணங்க, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அமர்வின் போது பேசுவதற்கு பெண் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்ட புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் இந்த கூட்டத்தொடரில் இருந்து அமல்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி நிறைவடைகிறது.