< Back
தேசிய செய்திகள்
உ.பி.:  நின்றிருந்த சொகுசு பேருந்து மீது மற்றொரு சொகுசு பேருந்து மோதல்; 8 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

உ.பி.: நின்றிருந்த சொகுசு பேருந்து மீது மற்றொரு சொகுசு பேருந்து மோதல்; 8 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
25 July 2022 10:32 AM IST

உத்தர பிரதேசத்தில் நின்றிருந்த சொகுசு பேருந்து மீது மற்றொரு சொகுசு பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.



பாராபங்கி,



உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்து சென்றபோது, நின்றிருந்த மற்றொரு சொகுசு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 16 பேர் காயமடைந்து உள்ளனர். இரண்டு பேருந்துகளும் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்து உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி பாராபங்கி போலீஸ் சூப்பிரெண்டு அனுராக் வத்ஸ் கூறும்போது, விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. லக்னோ நகரில் சிகிச்சை பெறும் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்