< Back
தேசிய செய்திகள்
உ.பி.: விஷம் வைத்து விடுவார்கள் என கூறி தேநீரை குடிக்க மறுத்த அகிலேஷ் யாதவ்
தேசிய செய்திகள்

உ.பி.: விஷம் வைத்து விடுவார்கள் என கூறி தேநீரை குடிக்க மறுத்த அகிலேஷ் யாதவ்

தினத்தந்தி
|
8 Jan 2023 3:12 PM IST

உத்தர பிரதேசத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு போராட சென்ற அகிலேஷ் யாதவ் அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் வைத்து விடுவார்கள் என கூறி குடிக்க மறுத்து விட்டார்.



லக்னோ,


உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும் உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் இன்று காலை கைது செய்து அழைத்து சென்றனர். அவரை விடுவிக்கும்படி கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் சென்றுள்ளார்.

அவருடன் கட்சி தொண்டர்களும் சென்றுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரியான அவருக்கு, போலீஸ் அதிகாரிகள் குடிக்க தேநீர் கொடுத்து உள்ளனர். ஆனால், உங்களுக்கு (தொண்டர்களிடம்) தெரியாது. எனது தேநீரில் அவர்கள் விஷம் வைத்து விடுவார்கள். எனக்கு தேவையான தேநீரை நானே வாங்கி குடித்து கொள்வேன்.

உங்களுக்கான தேநீரை நீங்களே குடியுங்கள் என போலீசாரிடம் கூறினார். அதன்பின்பு, காவல் நிலையத்திற்கு வெளியே சென்று தனக்கு தேநீர் வாங்கி வரும்படி கட்சி தொண்டர் ஒருவரிடம் அவர் கூறினார்.

இதன்பின்பு, சமாஜ்வாடி கட்சி தொண்டரான மணீஷ் ஜகனை லக்னோ போலீசார் கைது செய்து இருப்பது கண்டனத்திற்கு உரியது. வெட்கக்கேடானது. உடனடியாக அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என டுவிட்டரில் அகிலேஷ் பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்