< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கார் மீது விளம்பர பலகை விழுந்து இருவர் உயிரிழப்பு
|6 Jun 2023 4:56 AM IST
லக்னோவில் வீசிய பலத்த காற்றினால் ஏகானா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை கார் மீது விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வீசிய பலத்த காற்றினால் ஏகானா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை ஒன்று கார் மீது விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திங்கள்கிழமை மாலையில் இந்த விபத்து நடந்தது. திடீரென வீசிய பலத்த காற்றினால் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை ஒன்று கார் மீது விழுந்தது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொருவர் தற்போது லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.