< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
|12 Feb 2023 1:53 AM IST
உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் போட்டியிடும் என்று சிங் கூறினார்.
லக்னோ,
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) சந்தீப் பதக் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் போட்டியிடும் என்று சிங் கூறினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பதக், "உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது, ஆம் ஆத்மி கட்சி தனது மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு உறுதியளித்து அனைத்து பகுதிகளிலும் முழு பலத்துடன் தனது வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் போட்டியிடும்" என்றார்.