மகா சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடும் போது ஆற்றில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் மாயம் - இருவர் மீட்பு
|மகா சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.
படவுன்,
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் புனித நீராட சென்ற 5 மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் படவுனில் உள்ள கங்கை ஆற்றில் புனித நீராட சென்றனர். இந்த நிலையில் ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காணாமல் போன அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் அவர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்னும் 3 பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காணாமல் போன மாணவர்களின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.