< Back
தேசிய செய்திகள்
உ.பி: கார் விபத்தில் 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

உ.பி: கார் விபத்தில் 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
14 March 2024 5:55 PM IST

மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிந்து திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் உள்ள ராஜ்ஸ்ரீ மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த 4 மருத்துவ மாணவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் நேற்று இரவு பரேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 மாணவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணா யாதவ் மற்றும் ஆயுஷ் போர்வாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த தீபக் பதி (23) அரியானாவை சேர்ந்தவர் என்பதும், மற்றொரு மாணவரான ராகுல் ஸ்ரீவஸ்தவா (24) பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பதேகஞ்ச் (மேற்கு) காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜ்ஸ்ரீ கல்லூரித் தலைவர் ராஜேந்திர அகர்வால் கூறுகையில்,

இரவு நேரத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். ஜோதி கல்லூரியில் தேர்வு எழுதி விட்டு, திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாணவர்களின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்