உ.பி.: டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பக்தர்கள் பலி; பிரதமர் இழப்பீடு அறிவிப்பு
|உத்தர பிரதேசத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்த பக்தர்களின் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கான்பூர்,
உத்தர பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் சாமி தரிசனம் செய்து விட்டு கும்பலாக டிராக்டரில் பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில், கான்பூர் மாவட்டத்தில் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
எனினும், இதில் 10 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. 20-க்கும் கூடுதலானோர் காயமடைந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அவர்கள் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்து, இரங்கலும் தெரிவித்து உள்ளார். முதல்-மந்திரி யோகி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.