தரிசன டிக்கெட்டுடன் வந்தால் அன்லிமிடெட் லட்டு - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
|பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி,
தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அன்லிமிடெட் லட்டு வழங்கப்படும். நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற கட்டணத்தில் பக்தர்கள் தேவைப்படும் லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு, ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும். பக்தர்களுக்கு அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டது" என்று அவர் கூறினார்.
முன்னதாக, தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று திருமலை- திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.