< Back
தேசிய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி சாமி தரிசனம்

தினத்தந்தி
|
28 April 2024 9:58 PM IST

அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி அயோத்தி ராமர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

லக்னோ,

அமேதி மக்களவை தொகுதியின் எம்.பி.யான ஸ்மிருதி இரானி, வரும் தேர்தலில் அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனால் ஸ்மிருதி இரானி, கடந்த சில நாட்களாக அமேதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ள ஸ்மிருதி இரானி, இன்று அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை மேயர் மஹந்த் கிரிஷ்பதி திரிபாதி வரவேற்றார். பின்னர் ஹனுமன்கர்ஹி சென்ற ஸ்மிருதி இரானி, அங்கு பஜ்ரங்பலியை வழிபட்டார்.


மேலும் செய்திகள்