< Back
தேசிய செய்திகள்
கிரிக்கெட் விளையாடிய மத்திய மந்திரி... பா.ஜ.க. நிர்வாகியின் தலையில் பந்து பட்டதால் காயம்
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய மத்திய மந்திரி... பா.ஜ.க. நிர்வாகியின் தலையில் பந்து பட்டதால் காயம்

தினத்தந்தி
|
16 Feb 2023 5:12 PM IST

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா அடித்த பந்து பா.ஜ.க. நிர்வாகியின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் இட்டாவுராவில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பேட்டிங் செய்த போது, அவர் அடித்த பந்தை அங்கிருந்த பா.ஜ.க. நிர்வாகி விகாஸ் மிஷ்ரா பிடிக்க முயன்றார். ஆனால் அவர் கேட்ச்சை தவறவிட்டதால், பந்து நெற்றியில் பட்டு இரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்