< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி நிதின் கட்கரி வழிபாடு - நினைவுப்பரிசு கொடுத்த தேவஸ்தானம்
|13 July 2023 5:55 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மத்திய மந்திரி நிதின் கட்கரி, தனது குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மத்திய மந்திரி நிதின் கட்கரி, தனது குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை திருப்பதி வந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி, நேற்றிரவு திருமலையில் தங்கினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தோமாலை சேவையில் கலந்து கொண்டு, குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டார். தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகளை அதிகாரிகள் வழங்கினர். தேவஸ்தான வேத பண்டிதர்கள், வேத ஆசி வழங்கினர்.