< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் மத்திய மந்திரி நிதின் கட்கரி சந்திப்பு
|18 Aug 2022 10:46 PM IST
நிதின் கட்கரி தேசிய சாலைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு பெறுவதற்காக அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
மும்பை,
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை இன்று மும்பையில் நேரில் சந்தித்து பேசினார். தேசிய சாலைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவு பெறுவதற்காக நிதின் கட்கரி இன்று அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 80,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இது உலகளவில் சாலை விபத்து இறப்புகளில் 13 சதவீதம் ஆகும். இதனால் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்து உயிரிழப்பைக் குறைக்கவும், இந்தியாவில் தேசிய சாலைப் பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு அமிதாப் பச்சனின் ஆதரவை நிதின் கட்கரி கோரினார்.