< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கிரிப்டோகரன்சி குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பரபரப்பு தகவல்
|26 Feb 2023 2:26 PM IST
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாக, இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிப்டோ கரன்சி குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், கூட்டமைப்பு கிரிப்டோ குறித்து விரிவான விவாதம் மேற்கொள்ளும் என்றார்.
கிரிப்டோ போன்ற மெய்நிகர் சொத்துக்களில் மறைந்துள்ள அபாயங்களை உணர்ந்துள்ள ஜி20 நாடுகள், அதற்கு விரிவான கொள்கையை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.