< Back
தேசிய செய்திகள்
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பயணம்
தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பயணம்

தினத்தந்தி
|
13 July 2022 10:31 PM IST

மத்திய மந்திரி எல்.முருகன் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்கிறார்.

சென்னை,

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 3 நாள் பயணமாக நாளை செல்கிறார். அங்குள்ள, ரங்கட், கதம்தலா மற்றும் போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

குறிப்பாக மீன் இறங்கு தளத்தை பார்வையிட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடுகிறார். 75-வது சுதந்திர தின அமிர்தப்பெருவிழா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கதம்தலாவிலுள்ள ஆசாத் இந்த் சேது பகுதிக்கும் செல்கிறார்.

மேலும் செய்திகள்