< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
3 நாள் அரசுமுறை பயணமாக அந்தமான் சென்றார் மத்திய மந்திரி எல்.முருகன்
|21 Jun 2023 12:53 AM IST
3 நாள் அரசுமுறை பயணமாக மத்திய மந்திரி எல்.முருகன் அந்தமான் சென்றார்.
புதுடெல்லி,
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் 3 நாள் அரசுமுறை பயணமாக அந்தமான்-நிக்கோபாருக்கு நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். போர்ட் பிளேரில் உள்ள கரச்சராமாவில் நடைபெற்று வரும் 155 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தெற்கு அந்தமானின் கிராமப்புற பகுதிகளை போர்ட் பிளேருடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 4-ல் சிப்பிகாட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும், வேளாண்மை துறையின் இயற்கை பண்ணையையும் பார்வையிட்டார்.