< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு கொரோனா தொற்று உறுதி
|18 April 2023 6:14 PM IST
ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக மும்பையில் நடைபெற்ற 'இந்தியா ஸ்டீல் 2023' நிகழ்ச்சியில் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்கவில்லை. கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஜோதிராதித்ய சிந்தியா கேட்டுக் கொண்டுள்ளார்.