< Back
தேசிய செய்திகள்
சைப்ரஸ், ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை பயணம்
தேசிய செய்திகள்

சைப்ரஸ், ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை பயணம்

தினத்தந்தி
|
28 Dec 2022 3:46 PM IST

சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.



புதுடெல்லி,


மத்திய வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு நாளை (29-ந்தேதி) முதல் வருகிற ஜனவரி 3-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதன்படி, சைப்ரஸ் குடியரசு நாட்டுக்கு நாளை முதலில் பயணம் மேற்கொள்ளும் மந்திரி ஜெய்சங்கர் வருகிற 31-ந்தேதி வரை அந்நாட்டில் இருக்கிறார். இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளுக்கான தூதரக உறவுகளை இந்த ஆண்டு குறிக்கிறது.

இந்த பயணத்தில், சைப்ரஸ் வெளியுறவு மந்திரி அயோன்னிஸ் கசவுலைட்சை சந்தித்து பேசுகிறார். அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சமூகத்தினர் முன் உரையாற்றும் அவர், இந்திய வம்சாவளியினருடனும் உரையாடுகிறார்.

இதன்பின்பு, ஆஸ்திரியாவில் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகார மத்திய மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசுகிறார் என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்