< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
|28 July 2023 1:06 AM IST
இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் 15-வது இந்தியா-ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் மூலோபாய சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி யோஷிமசா ஹயாசி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. மேலும் இந்தியா-ஜப்பான் இடையிலான அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், வணிகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.