< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உடல் நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை
|1 May 2023 7:47 PM IST
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி. இவருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தனது வழக்கமான செயல்பாடுகளை அவர் தொடர்வதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.