< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கர்நாடகத்தில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை பிரச்சாரம்

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கர்நாடகத்தில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை பிரச்சாரம்

தினத்தந்தி
|
27 Jan 2023 4:52 PM IST

அமித்ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா, நாளை கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தார்வாட் பகுதியில் பிரம்ம தேவரா கோவில் அருகே நடைபெறும் பேரணியில் நாளை அமித்ஷா கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து பெலகாவி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அமித்ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடாக மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்