< Back
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி, 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பயணித்த இண்டிகோ விமான என்ஜினில் கோளாறு
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி, 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பயணித்த இண்டிகோ விமான என்ஜினில் கோளாறு

தினத்தந்தி
|
4 Jun 2023 2:44 PM IST

திப்ரூகார் நோக்கி மத்திய மந்திரி மற்றும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பயணித்த இண்டிகோ விமான என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டு உள்ளது.

கவுகாத்தி,

அசாமின் திப்ரூகார் நோக்கி 6இ2652 என்ற எண் கொண்ட இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அதில், 150 பேர் பயணித்து உள்ளனர்.

அந்த விமானத்தில், மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுவுக்கான இணை மந்திரி ரமேஷ்வர் தெளி மற்றும் பிரசந்தா புகான் மற்றும் தெராஷ் கோவல்லா ஆகிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் பயணம் செய்து உள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் நடுவழியில் திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனை விமானி பயணிகளிடம் அறிவித்து உள்ளார். இதனால், விமானம் திப்ரூகாருக்கு செல்வதற்கு பதிலாக, கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் பொர்தோலாய் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

இதன்பின்னர், விமானம் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர். இதுபற்றி மத்திய இணை மந்திரி தெளி கூறும்போது, நாங்கள் விமானத்தில் இருந்தபோது, 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடுவானிலேயே விமானம் சுற்றி வந்தது.

அதன்பின்னர், கவுகாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்