< Back
தேசிய செய்திகள்
அமலாக்கத்துறை தனிநபருக்கு அப்பாற்பட்ட அமைப்பு - அமித்ஷா
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை தனிநபருக்கு அப்பாற்பட்ட அமைப்பு - அமித்ஷா

தினத்தந்தி
|
11 July 2023 9:28 PM IST

அமலாக்கத்துறை எந்த ஒரு தனிநபருக்கும் அப்பாற்பட்ட அமைப்பாகும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு 3-வது முறையாக ஒரு வருடம் நீட்டித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்த நிலையில், அவரது பதவி காலத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அமலாக்கத்துறை எந்த ஒரு தனிநபருக்கும் அப்பாற்பட்ட அமைப்பாகும். பணமோசடி, அந்நிய செலாவணி சட்டங்களை மீறுதல் போன்ற குற்றங்களை விசாரிப்பதே அமலாக்கத்துறையின் நோக்கம். நோக்கத்தை அடைவதில் அமலாக்கத்துறை கவனம் செலுத்துமே தவிர அதன் இயக்குநர் யார் என்பது முக்கியமல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்