< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்
|31 May 2024 11:17 AM IST
இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்
திருப்பதி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்.. வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு அமித்ஷா திருப்பதிக்கு சென்றார்.
அமித்ஷாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். திருப்பதி மலையில் உள்ள வகுள மாதா விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு அமித்ஷா தங்கினார். இந்த நிலையில் இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது