< Back
தேசிய செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்
தேசிய செய்திகள்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்

தினத்தந்தி
|
1 Nov 2023 6:45 AM IST

யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கைக்கு செல்கிறார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். அவரது இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பவுத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு சார்பில் 82.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்