< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மும்பை புறநகர் ரெயிலில் பயணித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

24 Feb 2024 7:26 PM IST
மும்பையில் உள்ள காட்கோபரில் இருந்து தானேவில் உள்ள கல்யாண் வரை நிர்மலா சீதாராமன் ரெயிலில் பயணம் செய்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் புறநகர் ரெயில் சேவைகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மும்பை மண்டலத்தில் புறநகர் ரெயில்களில் தினந்தோறும் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்தார். மும்பையில் உள்ள காட்கோபர் ரெயில் நிலையத்தில் இருந்து தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையம் வரை சுமார் 30 கி.மீ. தூரம் அவர் ரெயிலில் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின்போது சக பயணிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இது தொடர்பான புகைப்படங்களை நிர்மலா சீதாராமன் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.