< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
|11 Oct 2022 3:38 PM IST
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதுபோல, அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் 21- ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.