< Back
தேசிய செய்திகள்
பீகார் மாநில அரசின் விமானம் வாங்கும் திட்டத்துக்கு பா.ஜ.க. எதிர்ப்பு; முதல்-மந்திரி நிதிஷ்குமார் கண்டனம்
தேசிய செய்திகள்

பீகார் மாநில அரசின் விமானம் வாங்கும் திட்டத்துக்கு பா.ஜ.க. எதிர்ப்பு; முதல்-மந்திரி நிதிஷ்குமார் கண்டனம்

தினத்தந்தி
|
30 Dec 2022 12:37 AM IST

பீகார் மாநில அரசின் விமானம் வாங்கும் திட்டத்துக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பீகார் மாநில அரசுக்கு புதிய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வாங்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளதாவது, பீகாருக்கு புதிய விமானம் வாங்கும் திட்டம் என்பது மிக முக்கியமானதாகும். இதற்காக சட்டசபையின் ஒப்புதலும் ெபறப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள், மக்களின் நலனுக்காக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் உதவியாக இருக்கும் என்றார்.

ஆனால் இந்த புதிய விமானம் வாங்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய விமானம் வாங்குவதற்கு ரூ.250 கோடிக்கும் மேல் செலவாகும். இந்த திட்டத்தால் பீகார் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை மாறாக முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் 2024-ம் ஆண்டு பிரதமர் கனவுக்கு மட்டுமே இந்த புதிய திட்டம் பயன்படும் என முன்னாள் துணை முதல்-மந்திரி சுசில் குமார் மோடி கூறியுள்ளார்.

பா.ஜனதாவின் இந்த எதிர்ப்பு நிலைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்