வடஇந்தியாவில் தெளிவற்ற வானிலை; சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் காலதாமதம்
|வடஇந்தியாவில் தெளிவற்ற வானிலையால், சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
வடஇந்திய பகுதிகளில் கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால், ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதன்படி, பூரி-டெல்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண். 12391, ராஜ்கீர்-புதுடெல்லி ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரெயில் எண். 22181, ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
ரெயில் எண். 15658, காமாக்யா-டெல்லி பிரம்மபுத்ரா மெயில் மற்றும் ரெயில் எண்.14205, அயோத்தி கான்ட்-டெல்லி எக்ஸ்பிரஸ் ரெயில் 2.30 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
இதேபோன்று, ஹவுரா-புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் மற்றும் ரெயில் எண். 12615, எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்-புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது,
மால்டா டவுன்-டெல்லி பராக்கா எக்ஸ்பிரஸ், ரெயில் எண். 12155 ராணி கம்லாபதி-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஷான் இ போபால் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ரெயில் எண். 12409, ராய்கர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரெயில் முறையே 1.30 மணிநேரம், 1.15 மணிநேரம் மற்றும் 4 மணிநேரம் தாமதமுடன் இயக்கப்படுகிறது,