< Back
தேசிய செய்திகள்
ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியாவிற்கு வருகை
தேசிய செய்திகள்

ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியாவிற்கு வருகை

தினத்தந்தி
|
29 Jan 2023 10:00 PM IST

ஐ.நா. பொதுசபையின் தலைவரான சாபா கொரோசி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லி,

ஐ.நா. பொதுசபையின் 77-வது தலைவராக சாபா கொரோசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகை தந்துள்ளார்.

டெல்லியில் அவரை ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜ் மற்றும் வெளியுறவுத்துறை இணை செயலாளர் பிகாஷ் குப்தா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். ஐ.நா. பொதுசபையின் தலைவராக அவா் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஐ.நா. எதிா்கொண்டு வரும் சா்வதேச சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்க பொதுசபைத் தலைவரின் இந்தியப் பயணம் உதவும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்