< Back
தேசிய செய்திகள்
உக்ரைன்-ரஷியா போர்; ஜி-20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம்
தேசிய செய்திகள்

உக்ரைன்-ரஷியா போர்; ஜி-20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம்

தினத்தந்தி
|
9 Sept 2023 5:33 PM IST

ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானம் பற்றிய விவரங்கள்,

இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தியளிக்கிறது.

உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக ஜி-20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலைநிறுத்தப்படும்.

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம்.

ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் மேற்கொள்வது எளிதாக்கப்படவும், செலவை குறைப்பதற்கும் தீர்மானம்.

வர்த்தகம் எளிதாக நடைபெற தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றுவது என ஜி-20 நாடுகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்