இந்தியாவிடம் கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு உக்ரைன் அரசு கடிதம் - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
|உக்ரைன் அரசு தரப்பில் கோரிக்கை மருத்துவ உதவிகள் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"உக்ரைன் இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வாயிலாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
3 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்த உக்ரைன் வெளியுறவுத்துறை இணை மந்திரி எமின் தபரோவா இந்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி மீனாட்சி லேகியை சந்தித்தார். அப்போது மீனாட்சியிடம் அந்தக் கடிதம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த சந்திப்பின்போது, உக்ரைனின் உள்கட்டமைப்பை மறுஉருவாக்கம் செய்வது இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எமின் தபேரோவா கூறினார்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.