< Back
தேசிய செய்திகள்
கோவாவில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு: இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தை புகார்

Image Courtesy: ANI

தேசிய செய்திகள்

கோவாவில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு: இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தை புகார்

தினத்தந்தி
|
10 Sep 2022 10:41 PM GMT

கோவாவில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தை புகார் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரி சூவெல்லா பிரேவர்மன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் கோவாவை பூர்வீகமாக கொண்டவர். தாய் உமா, தமிழ்ப்பெண்.

கிறிஸ்டி பெர்னாண்டசின் மூதாதையருக்கு சொந்தமாக வடக்கு கோவாவில் இருந்த 2 நிலங்களை மர்ம நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.

அசகாவோவில் 13,900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த 2 சொத்துகளையும் மீட்டு தருமாறு மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அதிகாரிகளுக்கு அவர் மனு அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோவா போலீசார், சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவம் கோவாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்