< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியாவில் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை - யுஜிசி தகவல்
|26 Aug 2022 4:24 PM IST
இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
டெல்லி, கர்நாடகா, கேரளா, மராட்டியம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக டெல்லியில் 8 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த போலி பல்கலைகழகங்கள் எந்தவித பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.