< Back
தேசிய செய்திகள்
உதய்பூர் கன்னையா லால் கொலையில் புதிய திருப்பம்; பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இல்லை - என்.ஐ.ஏ
தேசிய செய்திகள்

உதய்பூர் கன்னையா லால் கொலையில் புதிய திருப்பம்; பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இல்லை - என்.ஐ.ஏ

தினத்தந்தி
|
30 Jun 2022 7:24 PM IST

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியானது.

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்றுமுன் தினம் கொடூரமான முறையில் கன்னையா லால் வெட்டிக்கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையாலால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ. ஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இருவரால் கன்ஹையா லால் அவரது கடையில் வைத்து கொல்லப்பட்டார். அதன்பின்னர், இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், தையல் கடைக்காரர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என என்ஐஏ சந்தேகப்படுகிறது.

அதேவேளையில், இந்த கொடூர கொலையின் பின்னணியில் பயங்கரவாத கும்பலின் பங்கு உள்ளது. 2 பேர் மட்டும் சேர்ந்து இதை நடத்தியிருக்க வாய்ப்பில்லை.

தையல் கடைக்காரர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு என வெளியான தகவல்கள் கற்பனையே தவிர அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கை, 10 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்