கோவா: சிலிண்டர் வெடித்ததில் 2 பெண்கள் பலி
|சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள், ஆய்வுக்காக அந்த இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்தனர்.
பனாஜி,
கோவாவின் வாஸ்கோ நகர், நியூ வாட்டெம் காலனியில் ஷிவானி ரஜாவத் (வயது 23) மற்றும் அவரது மாமியார் ஜெய்தேவி (வயது 65) ஆகியோர் வசித்து வந்தனர். இன்று காலை 9 மணியளவில் அவர்களின் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதில் ஷிவானியும் அவரது மாமியாரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள், ஆய்வுக்காக அந்த இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்தனர். அதில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று ஆய்வு செய்தனர்.
சமையலறையில் சிலிண்டர் வெடித்தபோது, வீட்டில் இந்த இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தாக தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.