< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில்  பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
6 Sept 2022 4:02 PM IST

ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்