< Back
தேசிய செய்திகள்
தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
தேசிய செய்திகள்

தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தினத்தந்தி
|
21 Sep 2022 9:25 AM GMT

தலைக்கு 6 லட்ச ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் இன்று போலீசில் சரண் அடைந்தனர்.

மும்பை,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.

அந்த வகையில், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த அனில் என்கிற ராம்செய் குஜூர் (வயது 26), சத்தீஷ்கரை சேர்ந்த ரோஷ்னி பலோ (வயது 30) என்ற 2 நக்சலைட்டுகளின் தலைக்கு மொத்தம் 6 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ராம்செயின் தலைக்கு ரூ. 4 லட்சமும், பலோ தலைக்கு ரூ.2 லட்சமும் என மொத்தம் 6 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இந்த இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைக்கு மொத்தம் ரூ. 6 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகளான ராம்செய் குஜூர் மற்றும் ரோஷ்னி இன்று தங்கள் ஆயுதங்களை கைவிட்டு கட்சிரோலி மாவட்ட போலீஸ் முன் சரணடைந்தனர்.

மேலும் செய்திகள்