< Back
தேசிய செய்திகள்
ரூ. 28 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

ரூ. 28 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
22 April 2023 12:35 PM GMT

2 பெண் நக்சலைட்டுகளின் தலைக்கு மொத்தம் 28 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

போபால்,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படுபவர்களின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 பெண் நக்சலைட்டுகளின் தலைக்கு தலா 14 லட்ச ரூபாய் என மொத்தம் 28 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

சுனிதா, சரிதா ஆகிய 2 பெண் நக்சலைட்டுகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களின் தலைக்கு மொத்தம் 28 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்தியபிரதேசத்தின் பலஹட் மாவட்டம் ஹர்கி நகரை கட்லா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அந்த வனப்பகுதிக்கு போலீசார் சென்றனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு போலீசாரும் பதில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் இருவரும் தலைக்கு 14 லட்ச ரூபாய் என மொத்தம் 28 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட சுனிதா, சரிதா என்பது தெரியவந்தது.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் சுனிதா, சரிதாவிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், என்கவுண்டர் நடந்த இடத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்