< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தாஜ்மகாலுக்கு வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா
|14 Jan 2023 3:57 AM IST
தாஜ்மகாலுக்கு வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஆக்ரா,
அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர். இந்த சுற்றுலா குழு வாரணாசி நகரை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு வந்தது.
அப்போது அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது அந்த குழு ராஜஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில் ஆக்ரா சுகாதாரத்துறை அதிகாரிகள் ஜெய்ப்பூர் நகர சுகாதாரத்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.