துப்பாக்கியுடன் மதுபான விடுதிக்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்த இருவர் கைது..!
|இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை,
மும்பையில் துப்பாக்கியுடன் மதுபான விடுதிக்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அந்தேரியின் புறநகரில் உள்ள அம்போலி பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இருவர் துப்பாக்கியுடன் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மல்வானி மற்றும் ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர் . மேலும் அவர்களிடமிருந்த உரிமம் இல்லாத துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களில் ஒருவர் 23 வயதான கேபிள் ஆபரேட்டர், அவருக்கு எதிராக ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 56 வயதான மற்றொருவர் பழங்கள் விற்பனையாளர் எனவும் தெரிய வந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.