< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!
|7 Jun 2023 8:16 AM IST
மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஜபல்பூர்,
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபுரா பிடோனியில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியக் கிடங்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
ரெயில் தடம் புரண்டது குறித்து சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை, ரெயில் சேவையிலும் பாதிப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத் பெட்ரோலியம் யூனிட்டின் பிரதான கேட் அருகே ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.