< Back
தேசிய செய்திகள்
சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து -  இருவர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
6 Jun 2022 10:51 PM IST

கடபா அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு அருகே ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 32).இவர் தனது குடும்பத்தினருடன் காரில் கடபா தாலுகா சுப்ரமணிய சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றனர்.காரை ரவி(30) என்பவர் ஓட்டி வந்தார்.

சாமி தரிசனம் செய்து விட்டு இன்று மாலை ஊருக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர்.அப்போது பிலிநெலே கிராமத்தில் சேரு என்ற இடத்தில் வந்த போது பாலத் தடுப்பில் கார் மோதி விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் நாகேஷ் மற்றும் தேஜு என்கின்ற தேஜஸ்வினி(14) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிரைவர் ரவி,காரில் பயணித்த ரஜனி (24), ரஞ்சித் (24), அச்சிந்தியா(6), மற்றொரு குழந்தை ஆகியோர் காயங்களுடன் புத்தூர் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்