< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்து- 2 பேர் பலி
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்து- 2 பேர் பலி

தினத்தந்தி
|
7 Dec 2023 12:57 PM IST

பலத்த காயமடைந்த இருவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள தேவகிரி- பாம்பர்ஜ் சாலையில் இன்று அதிகாலை லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

மோகன் மாருதி பெல்கௌம்கர் (24), சமீக்ஷா திவேகர் (12) மற்றும் இருவர் தேவகிரியில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு காரில் பாம்பர்ஜ்க்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அங்கு சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.

இதில், காரில் இருந்த சமீக்ஷா, மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காருக்குள் சிக்கி பலத்த காயமடைந்த இருவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்