< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியபிரதேசம்: 70 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - 2 பேர் கைது
|21 Nov 2022 1:58 PM IST
மத்திய பிரதேசத்தில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய நபர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குவாலியர்,
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் 70 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கடத்தி வந்த 2 போரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 370 கிராம் ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், முரார் பகுதியில் இருந்து ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட வாகன சோதனையில் காரில் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 370 கிராம் ஹெராயின் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.