< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாம்: காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அதிகாரிகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
|27 April 2024 3:04 PM IST
காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அதிகாரிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள திராய் மஜுலி என்ற கிராமத்தில் வனத்துறை அதிகாரிகள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள தேக்கியாஜுலி வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்தது.
அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக அதிகாரிகள் முயற்சித்தனர். அப்போது யானை தாக்கியதில் வனத்துறை காவலர்கள் கோலேஸ்வர் போரோ, பீரன் ரவா மற்றும் உள்ளூர் நபர் ஜதின் தந்தி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் யானை தாக்கியதில் படுகாயமடைந்த மற்றொரு நபர் திபாகர் மலகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.