< Back
தேசிய செய்திகள்
இரண்டு நாள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது
தேசிய செய்திகள்

இரண்டு நாள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது

தினத்தந்தி
|
29 Jun 2022 2:32 AM IST

செஸ் வரி விதிப்பை நீட்டிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டம் இன்று நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக மாநில அரசு செஸ் வரி விதித்து வருகிறது. இந்த வரிவிதிப்பு வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது. எனவே இதை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றன. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் ஜி.எஸ்.டி. வரி கட்டமைப்பை திருத்துவது, வரி விலக்கு பட்டியலில் இருந்து சில பொருட்களை அகற்றுவது, வரி ஏய்ப்பை தடுக்க ஜி.எஸ்.டி. அமைப்பில் சீர்திருத்தம் செய்வது, ஆன்லைன் சூதாட்டம், தங்கத்தின் மீதான இ-வே பில்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்