< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் விரைவு ரெயில் தடம் புரண்டது
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் விரைவு ரெயில் தடம் புரண்டது

தினத்தந்தி
|
7 Sept 2024 8:30 AM IST

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜபல்பூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இன்று காலை 5.50 மணியளவில் இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரெயிலானது ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

ரெயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைவு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்